இதயத்தை சன்னமாக
சல்லடையாக்கிறது
உன் காதல்....
காலம்
நம்மை பிரித்துவிட்டது...
நம் காதல்
இன்னும் பிரியாதது கண்டு
என் உள்ளம்
ஆச்சரியக் குறியை
அடிக்கடி தனதாக்குகிறது...
வீடு..
வாசல்..
கணவன்...
குழந்தை...
எனது வட்டம் சுருங்கினாலும்...
அதையும் தாண்டிய
உனைப்பற்றிய தேடல்களை
விட்டுவிடும் எண்ணம்
இப்போதைக்கு எனக்கு இல்லை...
காரணம்...
இன்னும் நீ
தனிமையில்...
உன்னை வெறுத்து
வேரொருவரை மருமகனாக்க
அம்மா பிரயத்தனப்பட்டதை
இன்னும் ஜீரணிக்க முடியவில்லை...
திடுதிப்பென
மணமேடைக்கு ஏற்றப்பட்டதில்
பலத்த ஏமாற்றம் எனக்கு...
அதனால்தான்
அம்மா மீது
இன்னும் தீராக் கோபம் எனக்கு..
உள்ளே உனைப்பூட்டி
ரகசியமாய்ப் பூஜிப்பது
தப்புத்தான்...
இருந்தும் முடியவில்லை
உன் காதலை மறக்க...
உன் கரம்பற்றி
வாழ முடியாமல் போனது
என் தவரல்ல...
அது சூழ்ச்சி....
உன்னோடு வாழும் வரத்தை
இழந்ததற்காய்.....
எனக்கு நானே கொடுக்கும்
தண்டனைதான்
உன்னை நான்
இன்னும்
காதலிக்கிறேன் என்பது
காதலிக்கிறேன் என்பது

2 கருத்துகள்:
அருமையான கவிதை.... முதல் பதிவாக...
வருகைக்கு மிக்க நன்றி...
கருத்துரையிடுக